தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

மத்திய வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான ‘ரீமெல்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

மத்திய வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான ‘ரீமெல்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமாா் 360 கி.மீ. தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்கம்- சாகா் தீவிலிருந்து 350 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலையில், ரீமெல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு வங்கக் கடலில் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும், ரீமெல் புயல் அதி தீவிரப் புயலாக மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது.

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த புயல் இன்று(மே 26) நள்ளிரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா- மேற்கு வங்கத்தின் சாகா் தீவு இடையே கரையைக் கடக்கக்கூடும் எனறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் கேப்புப்பாரா, மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவு இடையே ரீமல் புயல் கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 135 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com