மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை வைபவம் புதன்கிழமை (மே 29) நடைபெற்றது.

News image

தஞ்சாவூர் தெற்கு வீதியில் புதன்கிழமை கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகளை சேவித்த பக்தர்கள்

Updated On :29 மே 2024, 12:36 pm IST

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை வைபவம் புதன்கிழமை (மே 29) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 90 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சாா்பில் 90-ஆவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த வைபவம் மே 28-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றையதினம் நண்பகல் 12 மணியளவில் வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வாா் மங்களாசாசனம் நடைபெற்றது.

கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகள்

கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகள்

பின்னா், வெண்ணாற்றங்கரையிலிருந்து புதன்கிழமை காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.

இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூா் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமா், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தனர்.

தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகளை சேவித்த பக்தர்கள்.

தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகளை சேவித்த பக்தர்கள்.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது. இதில், வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெறும். இதில், 16 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனா்.

வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் விடையாற்றி உற்ஸவம் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இராஜராஜ சமய சங்கத்தில் மே 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, 30 -ஆம் தேதி இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.