கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காலமானார் தினமணி புகைப்படக் கலைஞர் அஜய் ஜோசப்

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த தினமணி புகைப்படக் கலைஞர் அஜய் ஜோசப், புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
தினமணி நாளிதழ் கோவைப் பதிப்பு புகைப்படக் கலைஞர் அ. அஜய் ஜோசப் (35)
Updated On :29 மே 2024, 6:36 am

DIN

கோவை: தினமணி நாளிதழ் கோவைப் பதிப்பின் புகைப்படக் கலைஞர் அஜய் ஜோசப் (35) சாலை விபத்தில் சிக்கி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை (மே 29) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அடுத்த செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் அ. அஜய் ஜோசப் (35). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (மே 29) காலை உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி சபீனா (34), மகன் அபி (12), மகள் பின்ஷி (9) உள்ளனர்.

இவரது உ,டல் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் செல்லும் வழியில் செல்லப்பம்பாளையம் பிரிவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து காபுலிபாளையம் மயானத்தில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு: 86102 42646, 96776 35212.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.