ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இரண்டாவது இன்னிங்ஸ்: நியூசி. 171 / 9

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பெரிய தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2024, 12:06 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பெரிய தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இறுதி டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. மிக விரைவாகவே விக்கெட்கள் விழ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அனி வீரர், டேரில் மிட்சல் 82 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் சோ்த்தது. டாப் ஆா்டா் பேட்டா்களில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ரோஹித் சா்மா 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை நியூசி. பந்துவீச்சை திணறடித்தனர். 5-வது விக்கெட்டாக 60 ரன்களில் ரிஷப் பந்த் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து களத்திற்கு வந்த வீரர்களும் தட்டுத்தடுமாறி அவுட் ஆகினர்.

அதிகபட்சமாக, நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், நியூசி. அணியைவிட 28 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

Story image

இதனைத் தொடர்ந்து, தன் இரண்டாவது இன்னிங்ஸை நியூசி. அணி துவங்கியது. ஆகாஷ் தீப் பந்துவீச்சில் டாம் லாதம் 1 ரன்னில் அவுட் ஆக அடுத்ததாக டெவன் கான்வே, வில் யங் இணை பொறுப்பாக ஆடினர். ஆனால், கான்வே விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் எடுத்ததும் அடுத்தடுத்து களத்திற்குள் வந்த நியூசி. வீரர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் விரைவாக விக்கெட்களைக் கொடுத்தனர்.

நிதானமான ஆட்டத்தை ஆடிய வில் யங் 8-வது விக்கெட்டாக 51 ரன்களில் அவுட் ஆக, இறுதியில் இரண்டாவது நாளில் 43.3 ஓவர்கள் முடிவில் நியூசி. 171 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து இந்திய அணிக்கு 143 ரன்களை முன்னிலையாக (lead) வைத்திருக்கிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.