இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெருமையளிக்கிறது: டேரில் மிட்செல்

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெருமையளிப்பதாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
Daryl mitchell
டேரில் மிட்செல்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெருமையளிப்பதாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

நேற்றையப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக தொடரை வென்று வரலாறு படைத்தது.

டேரில் மிட்செல் பெருமிதம்

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெருமையளிப்பதாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நிறைய அழுத்தம் இருந்தது. ஆடுகளத்தின் தன்மை மற்றும் அளவு எங்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி மற்றும் ஹர்ஷித் ராணா நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள்.

நியூசிலாந்து அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அழுத்தமான சூழலிலும் அமைதியாக செயல்பட்டு நாங்கள் திட்டங்களை சரிவர செயல்படுத்தினோம். கடைசிப் போட்டியில் விளையாடிய விதம் குறித்து இரண்டு அணிகளுமே மிகுந்த பெருமையடைய வேண்டும் என நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் பல நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. ஆனால், தற்போதுள்ள நியூசிலாந்து அணி முதல் முறையாக தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது பெருமையாக உள்ளது. இந்த வரலாற்று வெற்றி நியூசிலாந்து மக்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும்.

எந்த ஒரு வடிவிலான போட்டியிலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதாக இருந்ததில்லை. தற்போதுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது மிகவும் சிறப்பான தருணம். நியூசிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் ரசிகர்கள் குறைவாகவே இருப்பார்கள். இங்கு இந்தியாவில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் விளையாடுவது மிகவும் சிறப்பானதாக இருந்தது என்றார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் தொடருக்காக 8 முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் முறையாக தொடரைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

New Zealand player Daryl Mitchell said that the historic victory against India was a proud moment.

Daryl mitchell
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வலுவாக இருக்கிறது, ஆனால்... தினேஷ் கார்த்திக் கூறுவதென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com