2-வது டி20: இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.
Rachin ravindra
ரச்சின் ரவீந்திராபடம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராய்பூரில் இன்று (ஜனவரி 23) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். டிம் செய்ஃபெர்ட் 24 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹார்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Summary

In the second T20 match against India, New Zealand, batting first, scored 208 runs for the loss of 6 wickets.

Rachin ravindra
டி20 உலகக் கோப்பையில் விளையாடாவிட்டால் நஷ்டம் வங்கதேசத்துக்குதான்: முன்னாள் இந்திய கேப்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com