

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அனல் மின் நிலைய குடியிருப்புகளில் நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலைய குடியிருப்பு தொட்டிபட்டியில் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்த குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த மர்ம கும்பல் 12 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. நான்கு வீடுகளில் தனி நபர்கள் மட்டும் குடியிருந்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகளில் விலை உயர்ந்த பொருட்களோ, பணமோ இல்லை. ஐந்து வீடுகளில் யாரும் வசிக்கவில்லை. மூன்று வீடுகளில் மட்டுமே கொள்ளை நடந்துள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் மோகனா என்பவர் வீட்டில் ஆறரை பவுன் தங்க நகை கொள்ளை அடிக்க பட்டதாக கூறப்படுகிறது.
நோபீஸ்வரன் என்பவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ 1,00,000 லட்சமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 11 பவுன் நகைகள் கொள்ளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு குறைந்தது தெரியுமா?
புகாரின்பேரில், மேட்டூர் காவல் துணைக்கண்கணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பறியும் மோப்ப நாய் உதவியுடனும், தடயவியல் நிபுணர்களைக் கொண்டும் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே பகுதி எட்டு வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த கும்பல் கைவரிசையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 12 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்து இருப்பது மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.