15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடக்கிவைத்து, தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குகிறார்.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை
பின்னா் அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சாா்பில் அரியலூா்-பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.
அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வருகை தந்துள்ளதையடுத்து, பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.