வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் பிரதானப் பாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இதையும் படிக்க: கங்குவா 12 நிமிட காட்சிகள் நீக்கம்!
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை.
இந்த நிலையில், வணங்கான் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (நவ. 19) அருண் விஜய் பிறந்த நாளையொட்டி, படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வெளியீட்டுத் தேதியினை தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, சூர்யா விலகிய நிலையில், அருண் விஜய் இணைந்தது குறிப்பிடத்தக்கது.