ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிமுகவில் உள்கட்சி மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை,கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டம்

அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலால் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு கள ஆய்வுக் கூட்டம் போர்க்களமாக மாறியது.

News image
கள ஆய்வில் நிர்வாகிகளை பேசவிடாமல், தலைவர்களே பேசி வருவதாக குற்றச்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி.
Updated On :22 நவம்பர் 2024, 9:13 am

DIN

நெல்லை, கும்பகோணத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலால் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் கள ஆய்வுக்கூட்டம் போர்க்களமாக மாறியது.

நெல்லை மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டம் சுமூகமான முறையில் நடந்து கொண்டிருந்தபோது அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையா திடீரென எழுந்து,அதிமுகவில் கள ஆய்வு சரியாக இல்லை என்றும் சரியான முறையில் நிர்வாகிகள் செயல்படாமல் இருந்ததால்தான் கடந்த தேர்தலில் நாம் குறைந்த வாக்குகள் பெற்றோம். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. உள்கட்சி மோதலால் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.

நிர்வாகிகள் முன்னிலையில் கைகலப்பு

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி, காமராஜ், மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்திலும் உள்கட்சி மோதலால் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் கள ஆய்வுக்கூட்டம் போர்க்களமாக மாறியது.

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.பாரதிமோகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி, காமராஜ், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

அப்போது,திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் கலாசாரம் நடைபெறுகிறது. இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கருத்துகளை கூறாமல் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களை வைத்து கருத்துகள் கூறி மக்களை திசை திருப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.700 ஆக இருந்து வந்த மின் கட்டணம்,திமுக ஆட்சியில் ரூ.1500 வரை வசூல் செய்யப்படுகிறது.இதனால் மின்சார கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

டாஸ்மார்க் மதுபான கடைகளில் கூடுதலாக தொகை வைத்து மது விற்கப்படுகிறது.

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த ஆட்சி தான் திமுக.

கட்டுமான துறையில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு தமிழகத்தில் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மேடைகள் போட்டு கலந்துரையாட எடப்பாடி பழனிசாமி அழைத்திருந்தார்.ஆனால் இதுவரை திமுகவிலிருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று அறிவித்தார்கள்.ஆனால் தற்போது தமிழகத்தில் நீட் நிலை என்ன?

அதானி குடும்பத்தின் பல ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்து வருகிறது. ஆனால் மு.க.ஸ்டாலினை அதானி நேரடியாக பார்த்து வந்துள்ளார்.

இடையில் நடந்த பேரம் என்ன? என்றார்.

அவர் பேச தொடங்கும் போது கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர் அம்பிகாபதி (முன்னாள் கவுன்சிலர்) முதலில் உறுப்பினர்களின்

குறைகளை கேளுங்கள். கள ஆய்வு என்று கூறிவிட்டு நிர்வாகிகளை பேசவிடாமல், தலைவர்களே பேசி வருகிறீர்கள் என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த கட்சித் தொண்டர்கள் அவரை அமைதியாக இருங்கள் எனக் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றிய பின்னர் கூட்டம் நடைபெற்று முடிந்தது

தமிழகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கோஷ்டி கைகலப்பு ஏற்பட்டதால் அதிமுகவில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.