டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமா? பரிந்துரையே வரவில்லை! - மத்திய அரசு

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிப்பதற்கான பரிந்துரை மாநில அரசிடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு விளக்கம்.
farming
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிப்பதற்கான பரிந்துரை, மாநில அரசிடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது. தமிழ்நாடு வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மாநில அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா, மக்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் கூறியுள்ளது.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும்.

எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை எனக் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com