மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை: தெற்கு ரயில்வே தகவல்

மாற்றுத்திறனாளி பயணாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை: தெற்கு ரயில்வே தகவல்
Center-Center-Madurai
Published on
Updated on
1 min read

மாற்றுத்திறனாளி பயணாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு 25 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்திற்கான அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும். இதற்காக, அரசு மருத்துவர் வழங்கும் மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து அடையாள அட்டை பயன்படுத்தும் முறை வந்தது. இதற்காக கோட்ட ரயில்வே அலுவலகங்களில் பயணாளிகள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்களின் பரிசீலனைக்கு பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் புதுப்பித்தலில்

ஏற்படும் சிரமங்களை போக்கும் நடவடிக்கையாக, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து அடையாள அட்டையை பெறுவதற்காக திவ்யங்ஜன் என்ற புதிய இணையதளத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடைமுறை தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டைகளை பெறுவதற்கு, புதுப்பிப்பதற்கும் https://divyangjanid.indianrail.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய பரிசீலனைக்கு பின்னர், அடையாள அட்டையை இணையதளம் மூலம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்தி ரயில்வே பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக(ஐஆர்சிடிசி) வாயிலாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளளாம்.

மேலும் பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் மற்றும் யுடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

ரயில்வே பயணச்சீட்டு சலுகை அடையாள அட்டைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பார்வை குறைபாடு மற்றும் பார்வை முழுமையாக இல்லாதவர்கள், மனநலம் பாதித்தவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள், எலும்பியல் ஊனமுற்றோர், முடக்குவாத நோயாளிகள், பாதுகாவலரின் உதவியின்றி பயணிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com