இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சித்தார்த் கௌல்
சித்தார்த் கௌல்
Published on
Updated on
1 min read

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2018-19 ஆம் ஆண்டில் 3 ஒருநாள் மற்றும் பல்வேறு டி20 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய 34 வயதான பஞ்சாப்பைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தான் ஓய்வு பெறுவதை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

நானும் தில்லி கேபிடல்ஸும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஒன்றிணைந்து வெல்வோம்: கே.எல்.ராகுல்

2008 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து இந்தியாவின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற அணியில் சித்தார்த் கௌலும் இடம்பெற்றிருந்தார்.

சித்தார்த் கௌல் பஞ்சாப் அணிக்காக மொத்தம் 88 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 111 லிஸ்ட் ஏ போட்டிகளில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் 145 டி20-களில் 199 விக்கெட்டுகளையும் மற்றொரு 182 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

சித்தார்த் கௌல் 155 விக்கெட்டுகளுடன், விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபியில் 87 போட்டிகளில் விளையாடி 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் ரோஹ்தக்கில் ஹரியானா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபியில் போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார்.

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.