அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆர்டிஎஸ்ஓ ஒப்புதல் இல்லாமல் பாம்பன் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தர நிர்ணய அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?

News image
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்
Updated On :28 நவம்பர் 2024, 8:29 am

DIN

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தர நிர்ணய அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 மீட்டா் நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டா் உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலத்தின் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி கடந்த நவ.13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது புதிய பாலத்த்தில் டிராலிகள் மற்றும் ரயில் இன்ஜின் சோதனை மற்றும் அதிவேக ரயில் இயக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாம்பன்-மண்டபம் இடையே கடந்த நவ.14-ஆம் தேதி 80 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரி செய்ய வேண்டும். குறிப்பாக கப்பல் வரும்போது மேல் நோக்கி தூக்கும் தண்டவாளப்பகுதியின் பளு தாங்கும் திறன் மற்றும் அதன் இயக்குமுறை அம்சம் வெளிநாட்டு தொழில்நுட்பம்சாா்ந்தது என்பதால் அதுகுறித்து ரயில்வே வாரியம் முறையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவேண்டும். பாலம் அமைந்துள்ள கடல்பகுதியில் இரும்பு பாகங்கள் துருபிடிக்கும் தன்மை அதிகம் என்பதால் அவ்வாறு துருபிடிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை ரயில்வே கோட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.

இருந்த போதிலும், பாலத்தின் உறுதித்தன்மைக்கு ஏற்ப சரக்கு மற்றும் பயணிகள் ரயிலை அதிகபட்சம் 75 கி.மீ வேகத்தில் இயக்க அனுமதிக்கலாம். தண்டவாளத்தின் இணைப்பு, சிக்னல் அனைத்தும் சரியாக உள்ளன. மதுரை-ராமேசுவரம் இடையே அனைத்து வகை ரயில்களையும் இயக்க அனுமதிக்கப்படும்.

பாலத்தை இயக்கும் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்ட பின் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பாம்பன் பாலம் தரம் குறைவாக இருப்பதாக தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரே குறை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

இந்த நிலையில், தர நிர்ணய அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் பாம்பன் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்.

பாம்பன் பாலம் 1914-இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை ரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர்டிஎஸ்ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும்.

இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்கவில்லை . ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது, துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார்.

அது மட்டுமல்ல, பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர்டிஎஸ்ஓ -வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18.10.24-இல் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் நாள்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை ரயில்வே அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

ரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான ஆர்டிஎஸ்ஓ வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இந்த த்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.