சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த்க்கும், பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவிக்கும் இன்று(நவ. 28) திருமணம் நடைபெற்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் முத்து பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெற்றி வசந்த். இவருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர், பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த அக். 13 அன்று திருமண நிச்சயதார்த்தத்தம் நடைபெற்றது.
இதையும் படிக்க: பிக் பாஸ் வர்ஷினி வெளியிட்ட முதல் விடியோ!
முன்னதாக, இவர்களின் திருமணத்தையொட்டி நண்பர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னி மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், இன்று வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகர் வெற்றி வசந்த தனது திருமணம் தொடர்பான விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வசந்த் - வைஷ்ணவிக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் அவர்களின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.