
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,831 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 95.04 அடியிலிருந்து 94.72 அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,470 கன அடியிலிருந்து வினாடிக்கு 10, 831 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையில் நீர் இருப்பு 58.21 டிஎம்சியாக உள்ளது.