மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சமந்தா விவாகரத்து விவகாரம்: தெலங்கானா அமைச்சர் மீது நாகர்ஜூனா வழக்கு!

தெலங்கானா அமைச்சர் மீது நாகர்ஜூனா வழக்கு தொடர்பாக...

News image

தெலங்கானா அமைச்சர், கே.டி.ஆர்., சமந்தா.

Updated On :3 அக்டோபர் 2024, 1:31 pm

சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக நடிகர் நாகர்ஜூனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் பேசிய தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ்தான் காரணம் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு நடிகர் நாகர்ஜுனா கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நடிகை சமந்தாவும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.