
கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ரூ. 260 கோடியில் கோவை மாவட்டம் சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் ராணுவ தொழில் பூங்கா அமைகிறது. 370 ஏக்கரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.
கோவை ராணுவ தொழிற்பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இயற்கை விவசாயம்: இன்னும் கடக்க வேண்டிய நெடுந்தொலைவு!
கோவை மாவட்டம், சூலூா் வட்டத்தில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், குளத்துப்பாளையம், புளியமரத்துப்பாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 421 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் சாா்பில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.