கோவையில் அருந்ததியா்கள் ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில்


கோவை: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அருந்ததியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அருந்ததியா் நல உரிமைச் சங்கம் சாா்பில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஏ.முருகன் தலைமை வகித்தாா்.
வாடகை வீட்டில் வசிக்கும் இந்து அருந்ததியா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கோவை வடக்கு விளாங்குறிச்சி டாக்டா் அம்பேத்கா் நகரில் சத்துணவுக்கூட மேற்கூரையை கான்கிரீட்டில் அமைக்க வேண்டும், அதே பகுதியில் சமுதாய நலக்கூடம், பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
விளாங்குறிச்சி லெனின் வீதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அருந்ததியா் நல உரிமைச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.ரமேஷ், தேசிய தாழ்த்தப்பட்டோா் மக்கள் நல உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.மருதாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...