மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு
தொழிலதிபர் விஜய் டாடா அளித்த புகாரின் பேரில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


பெங்களூரு: தொழிலதிபர் விஜய் டாடா அளித்த புகாரின் பேரில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான விஜய் டாடா பெங்களுரு போலீசாரிடம் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதில், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் ரமேஷ் கவுடாவின் தொலைபேசி வாயிலாக, குமாரசாமி தன்னிடம் பேசியதாகவும், அப்போது,
சென்னப்பட்னா இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி தேர்தல் செலவுக்காக தனக்கு ரூ.50 கோடி தர வேண்டும், இது அவரது வெற்றிக்கு அவசியம் என்று குமாரசாமி கூறினார்.
இதையும் படிக்க | ரெளடி கொலை வழக்கில் தொடர்புடைய ரெளடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியபோது, கோபமடைந்த குமாரசாமி,பணம் தராவிட்டால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது, பெங்களூருவில் நீ பிழைப்பது கடினம் என குமாரசாமி மிரட்டியதாகவும், மேலும், கோயில், பள்ளிக்கூடம் கட்டுவதாகக் குறிப்பிட்ட ரமேஷ் கவுடா, அந்தத் திட்டங்களுக்கு ரூ. 5 கோடி கேட்டு மிரட்டியதாகவும், இந்தப் பணத்தைத் தராவிட்டால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார் எனவிஜய் டாடா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது மிரட்டி பணம் பறித்தல், உயிருக்கு அச்சுறுத்தல் என 2 பிரிவுகளின் கீழ் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...