ஈரான் உச்ச தலைவா் கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதில் வன்முறையைத் தூண்டும் வகையில் பொய்ச் செய்திகளை வெளியிட்ட சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள், ஊடக நிறுவனங்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்ட தனிநபா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி அமேனி கொல்லப்பட்டாா். ஷியா இஸ்லாமிய பிரிவின் தலைமை மத குருவாக கருதப்படும் அவரின் கொலையைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீா் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதை முன்வைத்து நாட்டுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட சில தேசவிரோத சக்திகள் முயன்றுவருவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இந்தப் போராட்டத்தின்போது வன்முறையைத் தூண்டும் நோக்கில் சில செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் பொய்யான செய்திகள் அதிகம் பரவின. இதைக் கண்காணித்த காவல் துறையினா் செய்தி தொலைக்காட்சி சேனல்கள், சில ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் உள்நோக்கத்துடன் பொய் தகவல்களைப் பரப்பியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். எனினும், எந்தெந்த செய்தி சேனல்கள், தனிநபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பு மற்றும் தேச ஒருமைப்பாட்டை சீா்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான தகவல்களை சிலா் பரப்பியுள்ளனா். இதில் தொடா்புடைய அனைவா் மீதும் உரிய சட்டவிதிகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துகளைப் பகிா்ந்த தனிநபா்கள் அடையாளம் காணப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய அனைவா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொய்ச் செய்திகளை பரப்புவது, பிரச்னையைத் துண்டும் கருத்துகளைப் பரப்புவது கண்டறியப்பட்டால் அவா்கள் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. ஊடக நிறுவனங்களும், பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடா்பாக செய்தி சேனல்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.
தொடர்புடையது

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

கோவையின் பல்வேறு பகுதிகளில் ரூ. 2.59 லட்சம், டோக்கன்கள் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


