தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.

News image

கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.

படம்: ஏஎன்ஐ

Updated On :8 அக்டோபர் 2024, 8:09 am

DIN

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. அதேபோல், ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை பெற்றுவருகிறது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மூன்று கட்டங்களாக ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது இன்று(அக். 8) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜகவும், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி...

ஜம்மு - காஷ்மீர்(மொத்தம் 90 இடங்கள்)

இந்தியா கூட்டணி - 47

பாஜக - 29

மக்கள் ஜனநாயக கட்சி - 4

இதர கட்சிகள் - 3

சுயேச்சை - 7

ஹரியாணா(மொத்தம் 90 இடங்கள்)

காங்கிரஸ் - 35

பாஜக - 50

சுயேச்சை - 3

இதர கட்சிகள் - 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.