பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இருவரும் சுமார் 5 நிமிடங்கள் வரை தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, விக்கிரவாண்டியில் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு விஜய்யிடம் அன்புமணி வாழ்த்து கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.