
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேங்கிய 542 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் நேற்று 131 மி.மீ. மழை பெய்தபோதும் அதிகளவில் பாதிப்பில்லை.
சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டன. சென்னையில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல! பிழையற்ற தமிழ் அறிவோம்! -11
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து மிதமான மழையே பெய்து வருகின்றது.
சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.