

சென்னை: அதிமுக 53-ஆம் ஆண்டு விழாவையொட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழா அக் கட்சியினரால் வியாழக்கிழமை (அக்.17) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க |மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்!
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி காலை 10.40 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடா்ந்து எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 171 நலிந்த தொழிலாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.71 கோடி நிதி உதவியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அதிமுக மூத்த நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.