
பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி பெற்றுள்ள டிஆர்பி புள்ளிகள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் நிலையில், இந்நிகழ்ச்சி எவ்வளவு டிஆர்பி புள்ளிகள் பெரும் என்பது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் - 8 தொடக்க நிகழ்ச்சிக்கு 5.72 டிஆர்பி புள்ளிகளும், வார இறுதி நிகழ்ச்சிக்கு 4.27 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.
முதல் 10 இடங்களைப் பிடித்த தொடர்கள்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். தொடர்களை வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் பார்த்த காலம்மாறி, தற்போது இளம் தலைமுறையினர் மற்றும் அலுவலகத்துக்கு செல்வோர் சின்னத்திரைத் தொடர்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
அலுவலகம் செல்வோர் விருப்ப நேரங்களில் தொடர்களை ஓடிடித் தளங்களில் பார்க்கின்றனர். மக்கள் மத்தியில் எந்த தொடர் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது என்பதை டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 9.90 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
சென்ற வாரம் மூன்றாம் இடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் இந்த வாரம் 9.04 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தொடங்கி சில வாரங்களேயான மூன்று முடிச்சு தொடர் 9.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
மருமகள் தொடர் இந்த வாரம் 8.40 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. சுந்தரி தொடர் 7.95 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. இராமயணம் தொடர் 7.50 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 6 இடத்தில் உள்ளர்து.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 6.95 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது.
மல்லித் தொடர் 6.57 டிஆர்பி புள்ளிகளுடன் 8 ஆம் இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் 6.05 டிஆர்பி புள்ளிகளுடன் 9 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் 5.74 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10 ஆம் இடத்தில் உள்ளது.
வழக்கம்போல், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.