
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,384 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,090 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,384 கன அடியாக சரிந்தது.
இதையும் படிக்க |கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்
அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 94.65 அடியிலிருந்து 95.88 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 58.21 டிஎம்சியாக உள்ளது.