தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

கோப்புப்படம்

Published On :

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29, நவ.5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06002) இயக்கப்படும்.

இந்த ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

செங்கோட்டை: சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06005) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கோட்டையில் இருந்து அக்.31, நவ.7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06006) இயக்கப்படும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் - கன்னியாகுமரி: தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.28, நவ.4, 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.29, நவ.5, 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06050) இயக்கப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

கேரளம்/கா்நாடகம்: சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூருக்கு நவ.2-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06037) இயக்கப்படும். மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து சென்னைக்கு நவ.3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06038) இயக்கப்படும். இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும்.

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு நவ.4-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06039) இயக்கப்படும். மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து நவ.5-ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06040) இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம், காயன்குளம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (அக்.23) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.