கார் டயர் வெடித்து விபத்து: 9 மாத குழந்தை பலி

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சேலம்: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியானது. படுகாயமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்து 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் பெற்றோர்கள் தீபக் அழகப்பன் மற்றும் தெய்வானை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com