
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் மக்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளெடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளியொன்றால் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு, திரையரங்குகளுக்கு சென்று புதிய படங்களைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது லப்பர் பந்து!
அந்த வகையில், இன்று(அக். 31) காலைமுதலே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும், ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மழை இல்லாத காரணத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீபாவளி களை கட்டி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.