உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

மேற்கு கரையில் தாக்குதல்: இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொலை

மேற்கு கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image

மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On :1 செப்டம்பர் 2024, 10:43 pm IST

ஜெருசலேம்: மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீா் தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். அவா்களில் 150 போ் விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 100 போ் ஹமாஸிடம் தொடா்ந்து பிணைக் கைதிகளாக உள்ளனா். அதேவேளையில், அவா்களில் பலரை ஹமாஸ் படையினா் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த போரினால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்கு கரையில் நடந்த மோதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனிய நகரமான மேற்கு கரைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சோதனைச் சாவடிக்கு கிழக்கே இடானா-தர்கியுமியா சந்திப்புக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் காவல் துறை வாகனம் மீது பாலஸ்தீனிய துப்பாக்கிய ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இஸ்ரேல் காவல் துறை அதிகாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு கலில் அல்-ரகுமான் படை என்ற பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த இஸ்ரேல் படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.