
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கடந்த இரு நாள்களாக பெய்த தொடர் கனமழையால் 18 போ் பலியாகினர்.
இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
என்னுடைய எண்ணமெல்லாம் பெருவெள்ளம் மற்றும் இடைவிடாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மற்றும் தெலங்கானா மக்களை குறித்தே உள்ளது.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரப் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்துகிறேன்.
வெள்ளத்தால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்கும், மீண்டு வருவதற்கும் தெலங்கானா அரசு சோர்வின்றி உழைத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ஆந்திர அரசை அழுத்தமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.