கோவையில் கார் ஷோரூமில் தீ: 15-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!

கோவை சூலூர் அருகே தனியார் கார் ஷோரூமில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது.
கோவை சூலூர் அருகே தனியார் கார் ஷோரூமில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்.
கோவை சூலூர் அருகே தனியார் கார் ஷோரூமில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்.
Published on
Updated on
2 min read

கோவை: கோவை சூலூர் அருகே தனியார் கார் ஷோரூமில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது.

சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய கார் விற்பனை மற்றும் பழைய கார்கள் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தீ மளமளவென எரியத் தொடங்கியது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்தோர் முதல் கட்டமாக தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜ் கோபால் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

ஷோரூம்க்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர்.

கோவை சூலூர் அருகே தனியார் கார் ஷோரூமில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்.
தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள்: வனப்பகுதிக்குள் விரட்டிய வனத் துறையினர்!

மேலும் அதிகாலை நேரம் என்பதாலும் ஊழியர்கள் யாரும் இல்லாததாலும் தீ பிடித்தது தெரியவில்லை. தீயானது நிறுவனத்துக்குள்ளேயே பரவி தீ பிழம்பு மற்றும் புகை வெளியே தெரிந்த பின்னரே தீ விபத்து குறித்த தகவல் பரவியது.

இந்த தீ விபத்தில் கார்கள் பழுது நீக்கும் பகுதி மற்றும் கார் விற்பனை பிரிவு உதிரி பாகங்கள் அறை, கணினி அறை ஆகிய பகுதிகளுக்கும் தீ பரவி எரிந்து நாசமானது.

தீ பிழம்புகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக தங்களது வீடுகளில் இருந்து தீயை அணைக்கும் மற்றும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பெரும்பாலான கார்களையும் அப்புறப்படுத்தினர்.

சூலூர் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி சாலை பகுதியில் போக்குவரத்தை மாற்றி அந்த வழியை ஒரு வழி பாதையாக மாற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணமோ, சேத விபரங்களோ தெரியவில்லை.

தீ விபத்துக்கான காணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தீயினால் கட்டடம் இடிந்து விழுந்ததில் குடியிருப்புப் பகுதியில் வாசிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இடிந்த பகுதிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com