அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி வைத்திருந்த மர்ம நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து சட்ட அமலாக்கத்துறை முகவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.