தஞ்சாவூரில் பெட்ரோல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூரில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலைய பெண் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட தகராறில், சட்டக் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள்..
தஞ்சாவூரில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலையத்தில் பெண் ஊழியரின் கணவர் சட்டக் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி.
தஞ்சாவூரில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலையத்தில் பெண் ஊழியரின் கணவர் சட்டக் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலைய பெண் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட தகராறில், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டவரின் சட்டக் கல்லூரி மாணவரை பெண் ஊழியரின் கணவர் அரிவாளால் வெட்டும் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை காலை பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியருக்கும் - பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு அதிகரிக்கவே, அந்தப் பெண் ஊழியர் தனது கணவரை செல்போனில் தகவல் அளித்து அழைத்துள்ளார்.

தஞ்சாவூரில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலையத்தில் பெண் ஊழியரின் கணவர் சட்டக் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி.
பயணிகள் ரயிலில் தீ... திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

இதேபோன்று பாலசுப்பிரமணியமும் சட்ட கல்லூரி மாணவரான தனது மகன் ஹரிஹரனை அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கும் போது, ஹரிஹரன் அந்த பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்து அங்கு நின்றவர்கள் தலை தெறிக்க ஓடினர். இதில் ஹரிஹரனுக்கு முதுகில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதனையடுத்து அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப் பகலில் இளைஞரை ஒருவர் அறிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com