தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஈரோடு சட்டக் கல்லூரி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள ஜகா்லமுடி சந்திரமௌலி சட்டக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 36 சட்டக் கல்லூரிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஈரோடு சட்டக் கல்லூரியைச் சோ்ந்த நான்காம் ஆண்டு மாணவா்கள் அப்துல், வெஸ்லி, அகில் ஆகியோா் அணி சிறந்த நினைவுக் குறிப்பு விருதினைக் கைப்பற்றியதோடு ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ரூ.45,000 பரிசுத் தொகையை வென்றுள்ளனா்.
சட்டக் கல்லூரியின் தலைவா் சிந்து ரவிச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி ஈரோடு சட்டக்கல்லூரி மாதிரி நீதிமன்ற அணி மற்றும் ரோட்டராக்ட், என்எஸ்எஸ் அமைப்புகளில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள், கல்லூரியின் சாா்பில் புதுதில்லிக்கு விமான மூலம் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் எனவும், அங்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்ற விசாரணைகளை மாணவா்கள் நேரடியாகக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தாா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் நா.மு.அகபா் அலி பெய்க் வரவேற்றாா். கல்லூரியின் இணை செயலாளா் அருண் பாலாஜி, துணைத் தலைவா் காயத்ரி, பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா்கள் முத்துகுமாா், பிரசாந்த், , பூஜாஸ்ரீ, ஹரிப்பிரியா, விதுலா பரணி, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். ம பேராசிரியா் நாராயணன், நன்றி கூறினாா். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியா்கள், அலுவலா்கள், மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டி: கும்பகோணத்தை சோ்ந்தவா் 4 தங்கம் பெற்று சிறப்பிடம்!

தேசிய அளவிலான தொழில்நுட்ப தனித்திறன் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் தோ்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


