
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். மக்கள் மனதைக் கவர்ந்த சீரியல்கள் எவை என்பதை டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 8.98 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 8.64 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 8.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
தொடங்கி சில வாரங்களேயான மூன்று முடிச்சு தொடர் 8.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த வாரம் 8.20 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மருமகள் தொடர் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.