பாக்கியலட்சுமி தொடர் நடிகை ரித்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. இவர் பாக்கியலட்சுமி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரித்திகா, சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
தொடர்ந்து, வினு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ரித்திகா, திருமணத்துக்குப் பிறகு இவர் நடித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார்.
இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிடும் இவர், முன்னதாக தான் கருவுற்று இருப்பதாக அறிவித்து இருந்தார். பின்னர், அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.
நடிகை ரித்திகாவுக்கு சில நாள்கள் முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சின்னத்திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி இருந்தனர்.
இந்த நிலையில், ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு மகள் பிறந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவிற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.