ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

கடனை திருப்பித் தராததால் நண்பனின் 2 குழந்தைகள் கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை போலீசார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

News image

நண்பனின் குழந்தைகளை கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கட்டட ஒப்பந்ததாரர் வசந்த்.

Updated On :20 செப்டம்பர் 2024, 11:29 am IST

ஆம்பூர்: ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை போலீசார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அதே போல் வசந்த், வியாழக்கிழமை மாலையும் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்தின் செல்போனுக்கு அழைத்துள்ளார் யோகராஜ். ஆனால், அவரது

செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் அச்சமடைந்த யோகராஜ், உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர், குழந்தைகளின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வசந்த்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர்.

வசந்திடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ‘யோகராஜ்க்கு வசந்த் ரூ.14,000 கடனாக கொடுத்திருக்கிறார். அதை திருப்பிக் கேட்ட போது யோகராஜ் தர மறுத்து வந்துள்ளார். இதையடுத்து வசந்த்துக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் யோகராஜின்

இரண்டு குழந்தைகளை வசந்த் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.