ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரௌடி ஆல்வின் மீது பல வழக்குகள் உள்ளன: கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

கோவையில் சனிக்கிழமை சுட்டுப்பிடிக்கப்பட்ட ரௌடி ஆல்வின் மீது பல வழக்குகள் உள்ளன என்றும், அச்சத்தை ஏற்படுத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது

News image
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
Updated On :21 செப்டம்பர் 2024, 9:29 am

DIN

கோவை: கோவையில் சனிக்கிழமை சுட்டுப்பிடிக்கப்பட்ட ரௌடி ஆல்வின் மீது பல வழக்குகள் உள்ளன என்றும், அச்சத்தை ஏற்படுத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கான யோகா பயிற்சி நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கோவை கொடிசியா மைதானத்தில் ரெளடி ஆல்வின் பதுங்கி இருப்பதாக சனிக்கிழமை அதிகாலை கிடைத்த ரகசிய தகவலை அடுத்து , அவரை பிடிக்க ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் முற்பட்டனர். அப்போது ரெளடி ஆல்வின், காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சுட்டுபிடிக்கப்பட்ட ரெளடி ஆல்வின் மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரெளடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஆல்வினை பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை போலீசார் பிடிக்க சென்றபோது தப்பிச் சென்று விட்டார்.

இந்த நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருந்த ரெளடி ஆல்வின் போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது துப்பாக்கியை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார்?, யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.