திமுக - விசிக இடையே விரிசல் இல்லை: திருமாவளவன்

திமுக மற்றும் விசிக இடையே எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.
thol
தொல். திருமாவளவன் Din
Published on
Updated on
1 min read

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற தனது கருத்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனால் திமுக மற்றும் விசிக இடையே எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக- விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை, எந்த விரிசலும் இல்லை என்றும் அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை என்றார்.

என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய விடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள் எனவும், அந்த விவாதம் அடுத்தக்கட்ட விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது என்றும் கூறியதுடன், அதனால் திமுக-விசிக இடையில் எந்த சிக்கலும் எழுதாது, எழுவதற்கு வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு உள்கட்சி விவகாரங்களை கலந்து பேசி தான் எந்த முடிவுகளையும் எடுப்போம் எனவும், உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி இருக்கிறேன்.

மீண்டும் நாங்கள் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X