புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு டெய்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அதிகயளில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக மூலக் குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெய்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.