பரிதாபங்கள் யூடியூப் சேனல் திருப்பதி லட்டு தொடர்பாக விடியோ வெளியிட்டு இருந்த நிலையில், அந்த யூடியூப் சேனல் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர மாநில காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக செயல்பாட்டாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக புகார்
இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ஆந்திர பிரதேச காவல் துறை தலைமை இயக்குநரிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. லட்டு பாவங்கள் என்ற புண்படுத்தும் விடியோவை வெளியிட்ட அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் விடியோவை நீக்கி இருந்தாலும், அந்த விடியோ இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக இருப்பது மட்டும் அல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை வளர்க்க முயற்சி செய்வதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தூண்டும் விதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையான விடியோ நீக்கம்
திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் விடியோ வெளியாகியிருந்தது.
லட்டு பரிதாபங்கள் விடியோவுக்கு எதிர்ப்புகள் அதிகமானதால், அந்த விடியோவை தங்கள் யூடியூப் பக்கத்திலிருந்து பரிதாபங்கள் குழு நேற்று(செப். 26) நீக்கியது
பரிதாபங்கள் யூடியூப் பக்கத்திலிருந்து இந்த விடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் இந்த விடியோ பலரால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?

யூடியூபா் திவாகா் கைது

லட்டு விற்பனையில் சாதனை

லட்டு விற்பனையில் சாதனை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



