
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், தற்போது அதற்குமாறாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.
சென்னையில் கடந்த செப்.20-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,000-ஐ கடந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.7,060-க்கும், பவுன் ரூ.56,480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(செப்.27) ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
இதேபோன்று தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி விற்னையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1,02,000-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
பண்டிகை காலங்கள் நெருங்கு நிலையில், தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
‘அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்ததே தங்கம் விலை உயரக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது. இது தவிர, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையேயான போா் தீவிரம் உள்ளிட்டவையும் முக்கிய காரணிகளாக உள்ளன’ என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை காலங்கள் நெருங்குவதால், நகை வாங்குபவா்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கத் தொடங்கும். அதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை என கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.