சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை
இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.