ஓணம் பம்பர் லாட்டரி! முதல் பரிசு ரூ.30 கோடியில் கையில் கிடைப்பது எவ்வளவு?மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு முதல்வர் பரிசு!

அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் சிறந்த குடிமக்களுக்கு அசாமிய புத்தாண்டான ரொங்காலி பிஹு பண்டிகையை முன்னிட்டு முதல்வர் சார்பில் கமோசா என்றழைக்கப்படும் பாரம்பரிய தாவணி அல்லது துண்டு பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், 2025-ம் ஆண்டிற்கான பரிசு பெறுவோர் பட்டியலில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய லக்‌ஷ்மிபூர் மாவட்டத்தின் பொசகோன் கிராமத்தைச் சேர்ந்த சிதா தாஸ் என்பவரின் பெயரும் இடம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்.2 அன்று மாலை முதலமைச்சர் ஹிமாந்தா விஸ்வாஸ் சர்மாவின் சார்பில் அவரது கிராமத் தலைவரினால் வழங்கப்பட்ட இந்தப் பரிசை சிதா தாஸ் பெரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், இந்தப் புகைப்படங்கள் உள்ளூர் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முதல்வர் பரிசின் பட்டியலில் சிதா தாஸின் பெயர் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனவும் வழங்கப்பட்ட உத்தரவை மட்டுமே அவர்கள் பின்பற்றியதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தொலைக்காட்சிகள், இன்வெர்டர் மற்றும் வாகனங்களின் பேட்டரிகளை திருடியதற்காக சிதா தாஸின் மீது கடந்த 2016-ம் ஆண்டு முதல் 4 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.