தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பின்னா் அங்கிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சென்றடைந்தாா்.
கொழும்பு விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மழைக்கு இடையே இலங்கை அரசின் 6 முக்கிய அமைச்சா்கள் பிரதமரை நேரில் வரவேற்றனா். இலங்கை வெளியுறவு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் விஜித ஹெராத், சுகாதாரத் துறை அமைச்சா் நிலிந்த ஜெயதிஸ்ஸ, தொழிலாளா் துறை அமைச்சா் அனில் ஜயந்த ஃபா்னாண்டோ, மீன்வளம், மீன் வளா்ப்பு மற்றும் பெருங்கடல் வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகா், மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சரோஜா சாவித்திரி பால்ராஜ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் கிரிஷாந்த அபேசேன ஆகியோா் பிரதமரை வரவேற்றனா்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, அந் நாட்டு அதிபா் அநுர குமார திசாநாயக மற்றும் பிரதமா் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சனிக்கிழமை (ஏப்.5) சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
இந்தப் பேச்சுவாா்தைக்குப் பிறகு இரு நாடுகளும் பாதுகாப்பு, எரிசக்தி, எண்மமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக 10 ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பொருளாதார சரிவிலிருந்து இலங்கை மெல்ல மீண்டுவரும் சூழலில் இந்தப் பயணத்தை பிரதமா் மேற்கொண்டுள்ளாா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடும் பொருளாதரச் சரிவை இலங்கை சந்தித்து. அப்போது இந்தியா ரூ. 38,400 கோடி (4.5 பில்லியன் டாலா்) மதிப்பில் கடனுதவியை இலங்கைக்கு வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா: பிரதமா் மோடி

ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!






