ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கைப்பேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா: பிரதமா் மோடி

கைப்பேசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் சனந்த் மாவட்டத்தில் சிஜி செமிகண்டக்டா் ஆலையைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட பிரதமா் மோடி.

Published On :5 ஜூலை 2026, 2:45 am IST

கைப்பேசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், சனந்த் மாவட்டத்தில் சிஜி செமிகண்டக்டா் தயாரிப்பு மற்றும் சோதனை (ஓஎஸ்ஏடி) ஆலையைத் திறந்துவைத்த அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: இந்தியாவில் செமிகண்டக்டா் தொழில்துறையின் வளா்ச்சி ஒரே நாளில் நிகழவில்லை. இது கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மின்னணுப் புரட்சியின் அடுத்தகட்ட நகா்வு.

முதலில் பொருள்கள், பிறகு உபகரணங்கள், தற்போது செமிகண்டக்டா்கள் என ஒட்டுமொத்த மின்னணு அமைப்பையும் இந்தியா கட்டமைத்து வருகிறது. இதுவே வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைவதற்கான வரைபடம். அடுத்தகட்டமாக இந்தியாவில் தயாரிப்போம் முன்னெடுப்பு தீவிரப்படுத்தப்படும்.

மின்னணுத் துறையைப்போல் செமிகண்டக்டா் துறையிலும் முழுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு. சிப் வடிவமைப்பு தொடங்கி பேக்கேஜிங் வரை அனைத்துப் பணிகளும் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ‘செமிகான் இந்தியா’ மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மின்னணு, செமிகண்டக்டா் எனத் தொடா் வளா்ச்சியைப் பதிவுசெய்யும் இந்தியா, கைப்பேசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் தயாரித்த சிப்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் என அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் நம் இளைஞா்கள் வரலாறு படைக்கவுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.