
நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
லுக்கா சுப்பி, இங்கிலிஷ் விங்கிலிஷ், மிமி போன்ற பிரபல பாலிவுட் திரைப்படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் உட்டேகரின் இயக்கத்தில், நடிகர் விக்கி கௌஷலின் நடிப்பில் உருவான ‘சாவா’ திரைப்படம் கடந்த பிப்.14 ஆம் தேதி வெளியானது.
தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வசூலானது இந்த வார இறுதியில் ரூ.600 கோடியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஜா சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதுடன் மிகப் பெரியளவில் பேசுப் பொருளானது.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படத்திற்கு மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் அரசுகள் வரி நீக்கம் செய்தன.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளியான இந்தத் திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா, ரஷ்மிகா மந்தனா, அஷுதோஷ் ரானா, திவ்யா தத்தா, வினீத் குமார் சிங் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வரலாற்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
முன்னதாக, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக சிலர் சாவா திரைப்படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியிட்டது தொடர்பாக கடந்த மார்ச் 20 ஆம் தேதி அதன் தயாரிப்பு நிறுவனமான மாடோக் ஃபிலிம்ஸ் சார்பில் மும்பை காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திரைப்படமானது நாளை (ஏப்.11) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:அஜித் படத்துக்கு வாழ்த்து: ஜெயிலர் 2 அப்டேட் கூறிய ரஜினி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.