டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(ஏப்.12) சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160-க்கு விற்பனையாகிறது. நான்கு நாள்களில் சவரனுக்கு ரூ. 4,365 உயர்ந்துள்ளது.

News image
ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய ஒரு சவரன் தங்கம்
Updated On :12 ஏப்ரல் 2025, 5:25 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(ஏப்.12) சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160-க்கு விற்பனையாகிறது. நான்கு நாள்களில் ரூ. 4,365 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 9 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த புதன்கிழமை(ஏப்.9) தடாலடியாக சவரனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ.67.280-க்கும், வியாழக்கிழமை ரூ. 1,200 உயர்ந்து ரூ.68,480-க்கும், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160 விற்பனை செய்யப்படுவதால் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் ரூ. 8,775-க்கும் ஒரு சவரன் ரூ. 70,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நான்கு நாள்களில் சவரனுக்கு ரூ. 4,365 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.